தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் மூத்த பிள்ளையான பாரதிராஜா புதிய சங்கத்தினை தொடங்கியிருப்பது நியாயமா? உடனடியாக இதனை கலைக்க கோரி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் எப்போதும் அதிக பிரச்சனைகள் இருந்து வருவதால் அது செயல்படாமல் தான் இருக்கிறது. இந்த நிலையில் தான் பாரதிராஜா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இணைந்து தற்போது ஒரு புதிய தயாரிப்பாளர் சங்கத்தினை உருவாக்கியுள்ளனர். பிரசவ வலியாக தான் இருக்கும் ஆனால் குழந்தை பெற்றெடுத்தாக வேண்டும் என்று பாரதிராஜா புதிய சங்கத்தினை தொடங்குவதற்கு முன்னர் பேசியிருந்தார்.
இதனையடுத்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. இதனையடுத்து இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசுகையில், பாரதிராஜா தொடங்கியுள்ள புதிய சங்கத்தினை உடனடியாக கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே சிக்கலில் தவித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு தற்போது தேவையில்லாத ஒன்று என்ற கருத்தினை முன்வைத்தனர்.
இதோடு உணர்ச்சி வசப்பட்டு பாரதிராஜா முடிவெடுத்துவிட்டதாகவும் எப்போதும் தாய் சங்கத்தில் அவருக்கு இடமுண்டு எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.