தற்போது இணையத்தில் தளபதி நடிகர் விஜய்யின் பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு வில்லினாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தாயார் ஷோபாவுடன், உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் முன்பு விஜய் எடுத்துக்கொண்ட அந்த பழையப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைலராகி இருக்கிறது.
இந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு உற்சாகமாகியுள்ளனர்.