’அந்தாதூன்’ ரீமேக்கில் இணைந்த முன்னனி பிரபலங்கள்!

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் ‘அந்தாதூன்’.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்பு, ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஃபெடரிக் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பிரஷாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

READ MORE- ஹாலிவுட்டில் மீண்டும் கால்பதிக்கும் தனுஷ்!

தபு கேரக்டரில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரையும் அணுகி வருவதாக படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், இதன் தெலுங்கு ரீமேக்கில் தபு கேரக்டரில் நயன்தாராவை அணுகியதாகவும் ஆனால், நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து தற்போது தமிழ் ‘அந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், அவருடைய கணவர் கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கும் ஒப்பந்தமாகியுள்ளனர். படத்திற்கு இசை சந்தோஷ்நாராயணன்.

படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரஷாந்த்துக்கும் அவரது கரியரில் இந்த படம் நிச்சயம் சிறந்ததொரு கம்பேக்காக அமையும் எனலாம்.

Exit mobile version