ஆண்ட்ரியாவின் புதிய பொழுதுபோக்கு – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா சுவாரஸ்யமான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்கள் மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்டுகளுக்கு பெயர் பெற்றவர்.

ஆயிரத்தில் ஓருவன், தரமணி போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பால் சிறந்து விளங்கினார். கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

ஆண்ட்ரியா ஒரு நடிகை மற்றும் திறமையான பாடகி மட்டுமல்ல, வேறு பல ஆர்வங்களையும் கொண்டிருக்கிறார். அவற்றை சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறார்.

தோட்டக்கலை மீதான தனது ஆர்வத்தையும், செல்லப்பிராணிகளை விரும்புவதையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்ட ஆண்ட்ரியா, பேக்கிங் செய்வதில் உள்ள தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். 

இப்போது ஆண்ட்ரியா, மட்பாண்டங்களை செய்ய கற்றுக் கொண்டதாக, தனது முதல் மட்பாண்ட முயற்சியின் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

ஆண்ட்ரியாவின் மட்பாண்ட திறன்களைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். தவிர, சுந்தர் சி-யின் ஹாரர் காமெடி அரண்மனை 3 மற்றும் மிஷ்கினின் ஹாரர் படம் பிசாசு 2 ஆகியவற்றில் ஆண்ட்ரியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version