அர்னப் கோஸ்வாமியுடனான நேரலை நிகழ்ச்சியிலேயே சாப்பிட்ட கஸ்தூரி – வைரலாகும் வீடியோ!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல வர்ணனையாளர் அர்னப் கோஸ்வாமி நடத்தும் நிகழ்ச்சியில், சமீப காலமாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் நடிகை கஸ்தூரியும் பங்கேற்றார்.


செய்தி சேனல் விவாத நிகழ்ச்சி என்பதால், விவாதத்தில் பங்குபெறும் அனைவரையும் நேரலையில் காண்பிப்பது வழக்கம், அப்படிதான் கஸ்தூரியின் வீடியோவும் இடம் பெற்றிருந்தது, விவாதம் சூடாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென கஸ்தூரி நேரலையிலேயே சாப்பிட துவங்கி விட்டார்.
கஸ்தூரி சாப்பிடும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிலும் ஒருவர் அந்த வீடியோவை “இந்த பொண்ணோட நம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்ற வாசகத்துடன் வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ” 60 நிமிடங்களா அர்னப் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன், அவர் எப்படியும் என்னை பேசவிடப்போவதில்லை என்பதால் சாப்பிட துவங்கிவிட்டேன், ஸ்கைப்’ல் இருந்து வெளியேற மறந்து விட்டேன், அதற்காக அனைவரும் என்னை மன்னிக்கவும்” என்று நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version