அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 100 கோடிக்கு மேல் நன்கொடை ….

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 100 கோடிக்கு மேல் நன்கொடை குவிந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்பூமி  பூஜைக்குப் பின்னர் குறிப்பிட்ட காலத்தில் கோவிலை கட்டி எழுப்புவதற்காக பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கடந்த 2 மாதங்களில் மட்டும் ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடை ரூ.100 கோடிக்கும் அதிகமாகக் குவிந்துள்ளதாகக் கூறியுள்ளது.

ராமர் கோயில் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா இதுகுறித்துக் கூறியுள்ளதாவது : ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் நன்கொடைகள் வந்துகொண்டுள்ளன.மேலும் 200 கிலோவுக்கு அதிகமான வெள்ளி மற்றும் தங்க நகைகளும் நன்கொடையாக வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version