தமிழ் திரைப்பட நடிகர்கள் சம்பளத்தில் 30 % விட்டுக்கொடுக்க வேண்டும் என இயக்குநர் இமயம் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தக் கொரொனா தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய மார்ச் 24 ஆம் ஆண்டு பொது ஊரடங்கை அறிவித்தது. இதன்படி சுமார் 200 நாட்களுக்கும் மேலான திரைப்படத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே சினிமாவில் ஷுட்டிங் உள்ளிட்ட பணிகள் நடைபெறாததால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் பல முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பணம், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் செய்தனர்.,
இந்நிலையில் முந்தைய நிலவரம் தற்போது இல்லாத நிலையிலும் சினிமா தனது இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 6 மாத காலமாவது ஆகும் என்று கருதப்படுவதாலும் தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் இல்லாமல் போனதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.