அப்படி என்னதான் இருக்கு இந்த பிக்பாஸ்ல !!!!!!

100 நாட்கள் 100 கேமராக்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.2000 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட பில்பிரதேர் நிகழ்ச்சியின் தழுவல் தான் இந்த பிக்பாஸ். இது முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் ஹிந்தி மொழியில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு அதன் வெற்றியினால் ஒரு ஒரு மாநிலத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.

நம்ம பிக்பாஸ் :

நம்ம தமிழ் பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

நமக்கு இது மிகவும் புதுசு, முதன் முதலில் கமல் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் வந்து ஓடவும் முடியாது ஒளியவு முடியாது என்று சொல்லும் போது வழக்கம் போல இவர் என்ன சொல்கிறார் என திகைத்து தான் போனோம்.

சென்னை Evp பிலிம் சிட்டியில் மிகப்பெரிய அளவில் ஒரு வீடு போல் செட் அமைக்கப் பட்டது. பிரபலமான நட்சத்திரங்கள் ஆரம்பித்து வளர துடிக்கும் இளைஞர்கள் வரை போட்டியாளர்கள் இருந்தனர்.வீட்டின் உள்ளே இவர்களது துணி, அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருட்கள் மட்டும் அனுமதி. 100 நாட்களுக்கு உலக தொடர்பு இன்றி இருக்க வேண்டும்.

இவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு அவரவர் வேலைகளை செய்ய வேண்டும், தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரம் முழுவதும் இவர்கள் மைக்கை தங்களுடன் வைத்து கொள்ள வேண்டும். வாரம் இருமுறை கமலஹாசன் இவர்களுடன் உரையாடி இவர்கள் நிறை குறைகளை கேட்பார். வீட்டில் உள்ளவர்களே இந்த வீட்டில் இவர் இருக்க தகுதியற்றவர் என nominate செய்வார்கள். மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஓட்டு போட்டு அவர்களை காப்பாற்றுவார்கள்.
இதெல்லாம் நமக்கு புரியவே மாதம் ஒன்று தேவை பட்டது அதற்குள் அங்கு ஒவியாவிர்க்கு ஆர்மியே தொடங்கிவிட்டார்கள்.

முதலில் கேமரா இருப்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் இருந்தவர்கள் நாள்கள் போக போக இயல்பு நிலைக்கு வந்தார்கள்.
பிறகு என்ன பிக்பாஸ் சூடு பிடித்தது.

கஞ்சா கருப்பு _ பரணி சண்டை, வீட்டில் உள்ள அனைவரும் ஜூலியை குறி வைத்து தாக்கியது, பழனி சுவர் ஏறி குதித்து, காயத்ரி ஆர்த்தி தலைமையில் அரங்கேறிய சண்டைகள், ஜூலி ஏற்படுத்திய குழப்பங்கள், சினேக நின் போட்டி நுணுக்கங்கள், ஆரவ் ஓவியாவின் மெல்லிய காதல் வசனங்கள் என பட்டைக் கிளப்பியது.

பிடிக்காமல் பார்க்க ஆரம்பித்த மக்கள் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை வாழ்வின் அங்கமாக பார்க்க தொடங்கிவிட்டனர். தங்களுக்கு தெரிந்தவர் நண்பர்களுக்கு பிக்பாஸ் உறுப்பினர்களின் பெயர்கள் பட்ட பெயர்களாக வைக்கும் அளவிற்கு நிகழ்ச்சி மக்களை சென்றடைந்தது.

ஓவியாவின் கொக்கு நெட்ட, shutup பண்ணுங்க, திரும்பிகோ நா ஸ்ப்ரே அடிச்சிருவன், ஜூலியன் 5 செகண்ட் வீடியோ, கஞ்சா கருப்பு அய்யா nomination நா என்ன என்ற கேள்வி, நம்மவர் கமலின் குறும்படம் என்னும் குறும்பு வார்த்தை உலகமெங்கும் கொடி கட்டி பறந்தது.

அதன் வெற்றியை தொடர்ந்து இன்று சீசன் 4 வர போகிறது. புதிய விஷயத்துக்காக காத்திருக்கும் பொது அந்த காத்திருப்பு நேரத்தில் பழைய விஷயங்களை நினைத்து நிகழ்வுகளை அசை போடுவது ஒரு சுவாரசியமான விஷயம் தான்.

பிக்பாஸ் சீசன் நாங்கிற்காக காத்திருக்கும் வேளையில் பிக்பாஸ் 1,2,3 சீசனில் நடந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளோம். உங்களால் மறக்க முடியாத நிகழ்வினை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.

Exit mobile version