“என் கணவர் தற்கொலை செய்து கொண்டபோது கூட அழவில்லை”… பிக் பாஸ் பாவ்னி

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது கோலாகலமாக துவங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இன்று தாங்கள் கடந்து வந்த பாதை, வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள பிற ஹவுஸ்மேட்ஸ் உடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாவ்னியும் இசை வாணியும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பாவ்னி தனது கணவர் இறந்த நிகழ்வு குறித்து இசை வாணியிடம் சோகத்துடன் பேசுவது போல ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், எனது கணவர் இறந்து விட்டார்.

ஆனால், நான் அழவில்லை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன் என பாவ்னி கூறுகிறார். உடனே, அனைவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியது தான் என இசை வாணி, பாவ்னியை ஆறுதல் படுத்துவது போல இன்றைய ப்ரோமோ அமைந்துள்ளது.

Exit mobile version