ஜோடி சேரும் பிக்பாஸ் லாஸ்லியா, தர்ஷன்! #GoogleKuttappan

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவும் தர்ஷனும் ஒரே படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3 மூலமாக பலருக்கும் பரிச்சியமானவர்கள் லாஸ்லியாவும் தர்ஷனும்.

இருவரும் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் என்பதால் பிக்பாஸ்ஸில் இருவரும் அண்ணன் தங்கையாக பழகி வந்தனர். பிக்பாஸ்க்கு பிறகு இருவரும் தற்போது படங்களில் பிஸி. அந்த வகையில் இருவரும் தற்போது ஒரே படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.

கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக தற்போது ‘கூகுள் குட்டப்பன்’ உருவாகிறது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் அசிஸ்ட்டெண்ட்ஸ் சபரி மற்றும் சரவணன் இந்த படத்தை இயக்க கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தில் அப்பாவாக நடிக்கிறார்.

இவரது மகனாக தர்ஷனும், நண்பனாக யோகி பாபுவும், ஆண்டோகனிஸ்ட் கதாப்பாத்திரத்தில் ப்ராங்க்ஸ்டர் ராகுலும் நடிக்கிறார்கள். லாஸ்லியா ஃபீமேல் லீடாக நடிக்கிறாராம். படத்திற்கான ரெக்கார்டிங் வேலைகள் இன்று தொடங்குகிறது.

READ MORE- தன் காதலருடன் புகைப்படங்களை பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்!

ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். ரோபோட்டும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறதாம். அடுத்த மாதம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் ஷூட் ஆரம்பிக்க, ஏப்ரல் மாதம் 10 நாட்கள் ஃபாரின் ஷூட்டும் படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

Exit mobile version