‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு சம்யுக்தாவிற்கு விஜய்சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் சனம் வெளியேற்றப்பட அதற்கு முந்தின வாரம் சம்யுக்தா வெளியேற்றபட்டார்.
இருவரும் சிறந்த போட்டியாளர்களாக இருந்த போதிலும் வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து பல பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.
READ ALSO- ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ’மாஸ்டர்’ செல்ஃபி! #VIJYARULEDTwitter2020
மேலும் இவர்கள் வெளியேறிய போது இவர்களுக்கு வாழ்த்து சொன்ன கமல் இந்த பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை சரியாக பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், சம்யுக்தா தற்போது விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார்.
தீன தயாள் இயக்கும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில் மஞ்சிமா விஜய்சேதுபதியின் தங்கையாக நடித்துள்ளார். இந்த சூழலில் சம்யுக்தா இணைந்துள்ளதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.