பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் அன்பு கேங்கை டார்கெட் செய்யும் விதமாக நாமினேஷன் அமைந்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷனாக ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறினார்கள். இதனை அடுத்து இன்று நாமினேஷன் ப்ராசஸ் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் ஹைலைட் ஆகியிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 4ல் முதல் முறையாக ஓப்பன் நாமினேஷன் வந்திருக்கிறது. இதில் ஆரி, அனிதா, ரம்யா இவர்கள் மூவரும் ரியோவை நாமினேட் செய்கிறார்கள். இதற்கான காரணமாக அவர்கள் சொல்வது, ரியோ ஃபேவரிஸம் பார்த்து கேம் விளையாடுகிறார் என்பதுதான்.
அதேபோல, பாலாவும் ரியோவை நாமினேட் செய்கிறார். ‘இந்த ஓப்பன் நாமினேஷனுக்காக தான் இவ்வளவு நாள் காத்துட்டு இருந்தேன். ரியோ ஒரு விஷயம் தப்பு பண்ணறாரு. அதை சொன்னாலும் தப்பா புரிஞ்சுக்கிட்டு தப்பான ஒரு விளக்கத்த கொடுக்கறாரு.
அதுக்காக அவரை நாமினேட் பண்ணறேன்’ என்ற காரணத்தை முன் வைக்கிறார். அதேபோல ரியோவும் இதை ஒத்து கொள்ள மறுத்து பாலாவுடைய காரணத்துக்கு விளக்கம் கொடுக்கிறார். அர்ச்சனா வழக்கம் போல தன்னுடைய டார்கெட்டான ஆரியை நாமினேட் செய்கிறார்.
அர்ச்சனா வெளியே போனால் மட்டுமே ஆட்டம் சூடு பிடிக்கும். ரியோவை தவிர வேறு யாரெல்லாம் எவிக்ஷன் லிஸ்ட்டில் வந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.