கோழிப்பண்ணையாக மாறிய பிக்பாஸ் வீடு! #BiggbossPromo1

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்திருக்கிறார் பிக்பாஸ்.

இந்த வாரம் லக்சுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்தான் புரோமோவில் ஹைலைட் ஆகியிருக்கிறது. இதில் பிக்பாஸ் வீடு கோழிப்பண்ணையாக மாறியிருக்கிறது.

இதில் ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். ஒரு அணி கோழியாகவும், மற்றொரு அணி நரிக்கூட்டமாகவும் இருக்க வேண்டும். கோழிகளின் தங்க முட்டையை நரி அணி தொட வேண்டும். நரிகளை தொடவிடாமல் பாதுகாத்து அவர்களின் வாலை கோழிகள் பிடித்து விட்டால் நரிகள் அந்த சுற்றில் இருந்து வெளியேற வேண்டும்.

அதேபோல, நரிகள் முட்டைய தொடவிடாமல் இருக்க கோழிகள் பிக்பாஸ் கரன்சி மூலம் ஒப்பந்தமும் செய்து கொள்ளலாம். இறுதியில் யாரிடம் அதிகம் பிக்பாஸ் கரன்சி இருக்கிறதோ அவர்களுக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும்.

இதில் பாலா, ரம்யா, ஆரி இவர்கள் எல்லாம் ஒரு பக்கம் கோழி அணிகளாக இருக்க, மற்றொரு பக்கம் அர்ச்சனா, சோம், ஆஜீத் இவர்கள் எல்லாம் நரி அணிகளாக இருக்கிறார்கள். புரோமோவின் இறுதியில் பாலா தடுமாறி விழுவதோடு இது முடிகிறது.

Exit mobile version