பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கான கோழிப்பண்ணை டாஸ்க் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு லக்சுரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.
ஆனால், வழக்கம் போல டாஸ்க் ஆரம்பிக்கும் முன்பாகவே, போட்டியாளர்கள் குழப்பியடித்து சண்டை போட்டு கொண்டிருந்தார்கள். இன்று இரண்டாம் நாளாக இந்த டாஸ்க் தொடர்கிறது. இதில் நேற்று நடந்த சண்டைகளை ஒதுக்கி வைத்து விட்டு போட்டியாளர்கள் கடுமையாக விளையாடுகிறார்கள் என்பது பார்க்கும் போதே தெரிகிறது.
READ MORE- பாலா படத்திற்கு இசையமைக்கும் ரஹ்மான்?
அதிலும் நேற்று ஆரி டாஸ்க்கில் கோபப்பட்டு விட்டு செல்ல இன்று அவருடைய விளையாட்டை பார்த்து அனிதா, ரம்யா, அர்ச்சனா மூவரும் அவரிடம் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், கேபி ரம்யாவிடம் ‘இப்போ மட்டும் எதுக்கு ரூல்ஸ் மாத்தினீங்க?’ என சண்டையிட்டு கொண்டிருக்கிறார்.
பிறகு ஆரி, ‘முதல்ல யார் போனாலும் சரி, அதுக்கு அடுத்து யார் போனாலும் சரி நான் இனிமே புகுந்து விளையாடுவேன்’ என சொல்லிவிட்டு எழுந்து போக, அர்ச்சனா ‘தரமான சம்பவங்கள் எல்லாம் இனிதான் இருக்கு’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.
வீட்டின் இந்த வார தலைவர் அர்ச்சனாவா அல்லது ரம்யாவா என குழம்பும் அளவுக்கு ரம்யா தேமேவென இருக்க ரூல்ஸ்ஸை குழப்பியடித்து அதிகாரம் செலுத்துகிறார் அர்ச்சனா என சோஷியல் மீடியாவில் டாக் தற்போது கிளம்பியிருக்கிறது.