கோழிப்பண்ணை டாஸ்க்கில் பெஸ்ட் யார்? #BiggbossPromo1

கோழிப்பண்ணை டாஸ்க்கில் யார் பெஸ்ட் என நாமினேஷன் தொடங்கியிருக்கிறது.

‘என்னதான் நடக்குதுன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்!’ என நெட்டிசன்களை கதற விட்ட பிக்பாஸ்ஸின் கோழிப்பண்ணை டாஸ்க் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது போல.

இதில் யார் பெஸ்ட். வொர்ஸ்ட் என தேர்ந்தெடுக்கும் நாமினேஷன் ப்ராசஸ்தான் இப்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் ஹைலைட் ஆகியிருக்கிறது. இதில் நல்ல ஐடியாக்களை கொடுத்தார் என அர்ச்சனாவை அனிதாவும், சுவாரஸ்யமாக விளையாடினார் என பாலாவை  ரியோ, சோம் மற்றும் ஆரி நாமினேட் செய்கிறார்கள்.

பாலா, ரூல்ஸ் மீறாம விளையாடினார் என ஷிவானியை நாமினேட் செய்கிறார். அர்ச்சனா, என்னதான் என் முட்டைய உடைத்தாலும் சோம் நன்றாகவே விளையாடியதாக அவரையும் ரம்யாவையும் நாமினேட் செய்கிறார். இந்த முறையும் பாலா பெயர் வந்திருக்கிறது.

ஒவ்வொரு முறையும் கேப்டன் லிஸ்ட்டில் வந்தாலும் எதாவொரு காரணத்துக்காக பாலாவுக்கு அது மிஸ் ஆகி கொண்டே இருக்கிறது. இந்த முறையாவது பாலா பிக்பாஸ் வீட்டின் தலைவர் ஆவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.  

Exit mobile version