கேபியை மிரட்டிய பாலா! #BiggbossPromo1

பிக்பாஸ்ஸின் இன்றைய புரோமோவில் கேபிக்கும் பாலாவுக்கும் இடையில் சண்டை வந்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்தான் நடக்கும். இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷனில் இருக்க, டிக்கெட் டூ ஃபினாலே வெல்பவர் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் அவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்.

அந்த வகையில் நேற்று நடந்த இரண்டு டாஸ்க்குகளிலும் அதிக மதிப்பெண்களோடு ரியோ முன்னணியில் இருக்க ஆரி மற்றும் பாலா இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இன்று மூன்றாம் டாஸ்க். இதில் பாடல் ஒன்றின் இசை ஒலிக்கும். இதை கேட்டு பாடலை கண்டுபிடிப்பவர்கள் முதலில் ஓடி வந்து பஸ்ஸரை அடித்து பாட வேண்டும்.

READ MORE- ‘என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ பாருங்க’- சிம்பு வேண்டுகோள்!

இதில் முதலில் ஷிவானி சரியாக கண்டுபிடித்து டங்காமாரி பாடலை பாடுகிறார். அடுத்த பாடல் குறித்து கண்டுபிடிக்கும் போதுதான் போட்டியாளர்களுக்குள் விவாதம் ஆரம்பிக்கிறது.

குறிப்பாக கேபி பாலாவுக்கு இடையில். பாலா, ஷிவானி மற்றும் கேபி நான்தான் முதலில் தொட்டேன் என நிற்க, சட்டென்று கேபி பாடலை பாடி விடுகிறார். இதில் அப்செட்டான பாலா, ‘கேட்டுட்டு பாடி இருக்கனும் கேபி’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.

Exit mobile version