‘நீ சொல்றது மட்டுமே இங்க கேட்க முடியாது’- பாலா VS ரமேஷ் #BiggbossPromo1

பிக்பாஸ்ஸின் இன்றைய முதல் புரோமோவில் கால் செண்டர் டாஸ்க்கில் ரேங்க்கிங் அடிப்படையில் வரிசைப்படுத்த  விவாதம் போய்க்கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் சுவாரஸ்யமாக இருந்த கால்செண்டர் டாஸ்க் இந்த வாரம் அப்படியே எதிராக சுவாரஸ்யம் குறைவாக போட்டியாளர்கள் சேஃப் கேம் விளையாடினார்களோ எனும் அளவிற்கு இருந்தது.

நேற்று கால் செண்டர் டாஸ்க் முடிந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 1-13 என ரேங்க்கிங் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாலா மற்றும் ரமேஷ்க்கு இடையில்தான் விவாதம் தொடங்குகிறது.

இதில் கடைசி வரை கால் கட் செய்யாமல் விளையாடியவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் முதல் ஆறு இடத்திற்குள் வர வேண்டும் என சொல்ல, அதற்கு கேப்டன் ரமேஷ் எழுந்து ‘நீ சொல்வதை மட்டுமே இங்க கேட்க வேண்டுமா? நீ உன்னுடைய ஆதங்கத்தை சொல்லிட்டு ஆரி கால்ல கட் பண்ணிட்ட. ஆனா, அவரு அன்னைக்கு தூங்காம புலம்பிட்டே இருந்தது உனக்கு தெரியுமா?’ என சீரியஸாக கேட்க பாலா சிரிக்கிறார்.

இந்த ரேங்க்கிங் மூல இவர்களுக்குள் என்ன மாதிரியான விவாதங்கள் வர இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version