ஆரி ரம்யாவுக்கு இடையில் வெடித்த மோதல்! #BiggbossPromo1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஆரிக்கும் ரம்யாவுக்கும் இடையில் மோதல் வெளிப்படையாகவே வெடித்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் நேற்று நடந்த டாஸ்க்கில் ரம்யா ஆரி தன்னை பற்றி, ஒரு தலைப்பட்சம் சேஃப் கேம் விளையாடுவதாக சொல்லியதை தற்போது ஆரி சொல்லி கொண்டிருக்கிறார்.

’நான் ஒரு தலைப்பட்சம் மட்டும்தான் சொன்னேன், சேஃப் கேம்’ சொல்லல என ரம்யா குறுக்கிடு சொல்ல, அதை கேட்ட ஆரி, ’நான் பேசும்போது நீங்க பேசக்கூடாது அதுதான் ரூல்லயும் இருக்குன்னு நினைக்கிறேன்.

READ MORE- ‘கே.ஜி.எஃப்2’ டீசர் அவுட்!

என்னைய பத்தி பேசும் போது யார் கிட்டயும் நான் குறுக்க பேசல இதுதான் பிரச்சனை, உங்கள பத்தி குறை சொல்லும் போது அதை ரிசீவ் பண்ணிக்கற பக்குவம் இருந்தாலே போதும்’ என சொல்ல ரம்யா அப்செட்.

பல இடங்களில் ரம்யா ஆரி மேல் வெளிப்படையாக வெறுப்பை காட்டியிருந்தாலும் ஆரியும் தற்போது வெளிப்படையாக காட்ட ஆரம்பித்து இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version