’சனம்க்கு ஃபேவரிஸம் காட்டியிருக்கீங்க’- ஆரியிடம் சண்டையிட்ட அனிதா! #BiggbossPromo1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் ஆரி சனம்க்கு ஃபேவரிஸம் காட்டியதாக அனிதா மற்றும் பாலா அவரிடம் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் நேற்றைய கால் செண்டர் டாஸ்க்கில் ரேங்க்கிங்கில் சனம்க்கு ஓட்டுகளின் அடிப்படையில் இரண்டாம் இடம் கிடைத்தது.

இதை முன்னெடுத்தவர் ஆரி. எனவே இதனை ஆட்சேபம் தெரிவித்து பாலாவும் அனிதாவும் அவரிடம் பேசி கொண்டிருக்கிறார்கள். சனம் கடந்த வாரம் கால் செண்டர் டாஸ்க்கில் சம்யுக்தாவுக்கு மட்டுமே கால் செய்தார்.

இந்த வாரம் அவர் கால் செண்டர் ஊழியராக இருந்த போது யாரும் அவருக்கு கால் செய்யவும் இல்லை. ஆட்களில் ஒன்றும் குறைந்திருந்தது.

இதனால், ’அவருக்கு ஒரு கால் வந்ததுக்கு, ரெண்டு கால் வந்தவங்க என்ன செய்வாங்க?’ என பாலா கேட்க அதற்கு அனிதா, ‘அவங்க அந்த ரேங்க்குக்கு தகுதியானவங்கன்னா அவங்களே கேட்கக்கட்டும், யாரெல்லாம் வோட் பண்ணறீங்கன்னு கேட்டா, அவங்களே கைத்தூக்க போறாங்க. நீங்க ஏன் கேட்டீங்க. நீங்க ஃபேவரிஸம் சனம்க்கு காட்டியிருக்கீங்க’ என அனிதா சொல்கிறார்.

Exit mobile version