பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ரியோ மற்றும் அனிதாவுக்கு இடையில் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் நடந்த லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கான ‘புதிய மனிதா’ மற்றும் இந்த வாரம் முழுக்க சிறப்பாக செயல்படாதவர்கள் அடிப்படையில் அனிதா மற்றும் ரமேஷ் ஓய்வெடுக்கும் அறைக்கு தேர்வாகியிருக்கிறார்கள்.
இதில் அனிதா தன்னை நாமினேட் செய்ததற்காக ரியோவிடம் வாக்குவாதம் செய்கிறார். ‘புதிய மனிதா’ டாஸ்க்கில் ’நிஷாக்கா செய்த ஒரு காரியத்தால அர்ச்சனாக்கா கோபப்பட்டு அந்த டாஸ்க்கே டவுண் ஆச்சு.
ஆனா, டாஸ்க்ல ஒரு விஷயத்தை பண்ணா அது உங்களுக்கு சுவாரஸ்யம் இல்ல, நிஷாக்கா பண்ணா பிடிக்கல அப்படின்னு விட்டுருவீங்களா? நீங்க உங்க ஃப்ரண்ட்ஸ்க்காகதான் இத செய்யறீங்க’ என அனிதா சொல்ல, ரியோ ‘பிடிக்கலன்னு சொல்றதுக்கும் போரிங்ன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. நான் கேப்டன்சி டாஸ்க் சேர்க்கலை’ என சொல்கிறார்.
அதற்கு அனிதா, ‘கேப்டன்சி டாஸ்க்கையும் சேர்த்துதான் சொல்லனும். அப்போ தப்போ சொல்றீங்க’ என அனிதாவும் பதிலுக்கு கத்த புரோமோ அங்கு முடிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.