ஷிவானியை பிக்பாஸ் ஜெயிலுக்கு அனுப்பிய ரம்யா!- #BiggbossPromo2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் கோழிப்பண்ணை டாஸ்க்கில் வொர்ஸ்ட் யார் என்பது குறித்த நாமினேஷன் வந்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

இதில் முதல் புரோமோவில் கோழிப்பண்ணை டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் பெயர் சொன்னது போல, இந்த முறை சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக இருப்பவர்களது பெயர்களை சொல்ல வேண்டும். இதில் ஆரி, ஷிவானியை சொல்கிறார்.

READ MORE- கோழிப்பண்ணை டாஸ்க்கில் பெஸ்ட் யார்? #BiggbossPromo1

‘அவர் தன் மேல் நம்பிக்கை வைத்து விளையாடவில்லை’ என்பது ஆரி சொல்லும் காரணம். அதற்கடுத்து வந்த அர்ச்சனா, ’ஆரி என்ன ஸ்ட்டேடர்ஜி சொன்னாலும் அதை குறை கூறி விவாதத்தில் ஈடுபட்டார்’ என சொல்லி அவரை நாமினேட் செய்கிறார். அடுத்து வந்த பாலா, ரம்யா, அனிதா இவர்கள் கேபியை சொல்ல சோம் கேபி மற்றும் ஷிவானியை சொல்கிறார்.

இறுதியில் ஷிவானி மற்றும் கேபி இருவரும் ஜெயிலுக்கு போகிறார்கள். இதில் தனக்கு சொன்ன காரணங்களை ஒத்து கொள்ள மாட்டேன் என ஷிவானி சொல்கிறார். அதன் பிறகு ரம்யா ஷிவானி மற்றும் கேபியை ஜெயிலில் வைத்து பூட்டுவதோடு இந்த புரோமோ முடிகிறது.

Exit mobile version