ரம்யாவை கலாய்த்த பிக்பாஸ்! #BiggbossPromo2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ரம்யாவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்திருக்கிறார் பிக்பாஸ்.

இரண்டாவது பிக்பாஸ் புரோமோவில் கன்ஃபெஷன் ரூமுக்கு ரம்யாவை அழைத்திருக்கிறார் பிக்பாஸ்.

இதில் பிக்பாஸ் வீட்டில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்க, அதற்கு ரம்யா பாண்டியன் ’எனக்கு யார் கூடயாவது பிடிக்கல அப்படின்னா, கண்டிப்பா அங்க இருந்து விலகியே இருப்பேன்’ என சொல்ல அந்த பக்கம் ஆரியை காடுகிறார்கள். கோபம் என கேட்க, ‘பிக்பாஸ் வீட்ல எந்த இடத்துல எனக்கு சரின்னு படலையோ அங்க எல்லாம் பேசியிருக்கேன்’ என சொல்கிறார்.

READ MORE- இந்த வார கேப்டன்…தரமான சம்பவம் இனிதான் இருக்கு! #BiggbossPromo1

அந்த நேரத்தில் கோழிப்பண்ணை டாஸ்க்கில் அர்ச்சனா, ஆரி, ரம்யா இவர்கள் மூவரும் விவாதம் செய்து கொண்டிருப்பதை காட்டுகிறார்கள். அடுத்து அழுகை என பிக்பாஸ் கேட்க, ‘இந்த வீட்ல அழுகைல உண்மையும் இருக்கு, பொய்யும் இருக்கு’ என்கிறார் ரம்யா.

அதேபோல அடுத்து சக போட்டியாளர்கள் என பிக்பாஸ் கேட்டதும் ரம்யா பயங்கரமாக சிரித்துவிட்டு, ‘பிக்பாஸ் இவ்வளவு நேரம் என்னைய கேள்வி கேட்டீங்க, நான் இப்போ உங்களை ஒரு கேள்வி கேக்கலாமா?’ என ரம்யா கேட்க அதற்கு பிக்பாஸ், ‘நான் கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் வரலயே’ என கலாய்க்கிறார்.

ரம்யா இப்படி சிரித்து கொண்டே வெளியே வர அனிதா அவரை பார்த்து, ‘பிக்பாஸ்ஸையே கன்ஃபூயூஸ் செய்து சிரிக்க வைத்துவிட்டு வெளியே வந்திருக்கும் ரம்யா’ என சொல்ல ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவா’ என்ற பாடலோடு புரோமோ முடிகிறது.

Exit mobile version