பிக்பாஸ் ஃபைனல்ஸ்ஸில் ஆரி?- ஹிண்ட் கொடுத்த பாலா! #BiggbossPromo2

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.

பிக்பாஸ்ஸின் இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.

அதன்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் முன்வந்து இன்னொரு போட்டியாளரை அழைக்கலாம். அதன்படி, இருவரும் ஒருவர் கையை அடிக்க வேண்டும். அடித்த நபர் இவர்கள் முன் இருக்கும் பவுலில் உள்ள பேப்பரை எடுக்க வேண்டும்.

அதில் என்ன வார்த்தை இருக்கிறதோ அதை ஒட்டி என்ன கேள்வி வேண்டுமானாலும் எழுப்பலாம். இதுதான் டாஸ்க். இதில் ரம்யா-ஷிவானி, ரம்யா-சோம், பாலா-ஆஜீத், ஷிவானி- ஆஜீத், பாலா-சோம் என அனைவரும் வருகின்றனர்.

READ MORE- ”பாலாவ நம்பிதான் இனி கேம்”- ஷிவானி! #BiggbossPromo1

அதில், ஆரி ரம்யாவிடம், ‘அடுத்த வாரம் நாமினேஷனில் நீங்க நாமினேட் செய்யும் இருவர் யார்?’ என கேட்க, அதற்கு ரம்யா ஆரி மற்றும் கேபி பெயரை சொல்கிறார்.

பாலா ஆரியிடம், ‘நீங்க ஃபைனலில் இருக்கறீங்க அப்படின்னா, உங்க கூட இருக்க கூடிய மூவர் யார்?’ என கேட்க, அப்போது ரியோ எழுந்து ‘அய்யா நரி இவன்தான்’ என சொல்ல புரோமோ அதோடு முடிகிறது.

Exit mobile version