ரேங்க்கிங் ஆர்டர்…ரியோ ஆரிக்குள் வெடித்த மோதல்! #BiggbossPromo2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ரியோவுக்கும் ஆரிக்கும் இடையில் மோதல் வெடித்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் ரியோவுக்கும் ஆரிக்கும் இடையில் மோதல் வெடித்திருக்கிறது.

இதில் ‘பால் கேட்ச்’ டாஸ்க் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் போட்டியாளர்கள் விளையாடியதால் ஆஜீத், ஷிவானி, ரம்யா, ஆரி என அனைவரும் தூங்கி கொண்டிருக்க, ‘தூங்காதே தம்பி தூங்காதே, பின்பு காத்திருந்து ஏங்காதே, உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு’ என பாட்டு போட்டு பிக்பாஸ் போட்டியாளர்களை எழுப்பி விட்டு என்கரேஜ் பண்ணி விடுகிறார்.

READ MORE- பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு! #BiggbossPromo1

இந்த ‘பால் கேட்ச்’ மூன்றாவது பகுதியில் தனியாக சோம், அனிதா, பாலா அனைவரும் பாலை பிடிக்க ஆஜீத் தவற விடுகிறார். அதன் பிறகு, இந்த டாஸ்க்கை அடிப்படையாக வைத்து போட்டியாளர்களின் ஈடுபாடு, ஆர்வம் இவற்றை கொண்டு ரேங்க் கொடுக்க வேண்டும்.

இதில்தான் ஆரிக்கும் ரியோவுக்கும் இடையில் சண்டை ஆரம்பித்து இருக்கிறது. இதில் ரியோ, ‘நான் எனது 100% கொடுத்தேன்’ என சொல்ல, அதற்கு ஆரி, ‘எங்கே, மறுபடியும் சொல்லுங்க, ஒரு முறை சொன்னத மறுபடியும் சொல்ல மாட்டீங்களா?’ என கேட்க ரியோ, ‘இதுதான் கார்னர் பண்றது’ என கோபமாக சொல்லி கொண்டே அங்கிருந்து கிளம்பி செல்ல புரோமோ அத்துடன் முடிகிறது.

Exit mobile version