பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ஆரி, ரியோ மற்றும் சோமிற்கான கேப்டன்சி டாஸ்க் நடக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கேப்டன்ஸி தேர்வுக்கான டாஸ்க்கும் நடக்கிறது.
இதில் நேற்று சிறப்பாக செயல்பட்டு கேப்டன் நாமினேஷனுக்கு நேரடியாக அதிக மதிப்பெண்களோடு ரியோ தேர்வானார். ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்தது படி ஆரி மற்றும் சோம் தேர்வானார்கள். தற்போது, இவர்கள் மூவருக்கும்தான் கேப்டன்ஸி டாஸ்க் நடக்கிறது.
READ MORE- பிக்பாஸ் வீட்டில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! #BiggbossPromo1
இதில் மூவரும் வாயில் ஒரு ஸ்பூனை வைத்து கொண்டு அதில் தெர்மோகோலை நிரப்பி நடந்து சென்று தொலைவில் வைகப்பட்டிருக்கும் ஸ்நூமனின் தலைப்பகுதியில் இருக்கும் பவுலை நிரப்ப வேண்டும். யார் முதலில் முழுவதும் நிரப்புகிறார்களோ அவர்களே வெற்றியாளர் அதாவது அடுத்த வார கேப்டன். இதில் ரியோவும் இரண்டு முறையும் ஆரி ஒரு முறையும் கேப்டன் ஆகியிருக்கிறார்கள்.
ஆனால், சோம் இன்னும் ஒருமுறை கூட பேடன் ஆகவில்லை. இதில் பவுலை நிரப்பும்போது நடக்கும் பாதையின் கோட்டில் இருந்து இரண்டு முறை ஆரி விலகி விட்டதாக பாலா சொல்கிறார். ஆனாலும் இறுதியில் ஆரிதான் வின்னர் என அறிவிக்கிறார் பாலா. என்ன நடந்தது என்று இன்றைய எபிசோட்டில் பார்ப்போம்.