”பிக்பாஸ்க்கே வந்துருக்க கூடாது”- கண்கலங்கிய ரியோ! #BiggbossPromo2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ரியோவின் மனைவி ஷ்ருதி உள்ளே வந்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க்தான் போய் கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஷிவானி அம்மா, பாலாவின் அண்ணன் வந்திருக்க இன்று ரியோவின் மனைவி ஷ்ருதி வந்திருக்கிறார்.

READ MORE- ’இந்த வாரம் வெளிய வர போறது நீதான்’- ரம்யா பாண்டியன் தம்பி! #BiggbossPromo1

பிக்பாஸ் எல்லாரிடமும் ஃப்ரீஸ் சொல்ல, பின்னால் காதலே தனிப்பெரும் துணையே பாடல் ஓட ஷ்ருதி உள்ளே வருகிறார். இதில் ரியோ எமோஷனல் ஆகி அழுது கொண்டே அவரை கட்டிப்பிடித்து, ‘சாரி, நான் பிக்பாஸ்க்குள்ளயே வந்துருக்க கூடாது’ என சொல்ல ஷ்ருதி ஆறுதல் சொல்கிறார்.

அதன் பிறகு உள்ளே ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் ரியோவும் ஷ்ருதியும் பேசி கொண்டிருக்க, ’வெளிய ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்குமே, நீ ரம்யாவ தூக்கி சுத்தினது கடுப்பு’ என சொல்லி ரியோவை அடிக்க, ரியோவும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்ஸூம் ‘ஃப்ரண்ட்ஸ்ஸூடைய கடுப்பு மாதிரி தெரியலையே இது’ என சொல்லி சிரிப்பதோடு புரோமோ முடிகிறது.

Exit mobile version