பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ஆஜீத்துடைய குடும்பம் வந்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ஆஜீத்துடைய குடும்பம் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். ஆராரிராரோ பாடல் ஒலிக்க அவரது அம்மாவும், சித்தியும் உள்ளே வர ஆஜீத் கண்கலங்கி எமோஷனலாக அவரை வரவேற்கிறார்.
அதன் பிறகு ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் அமர்ந்து பேசி கொண்டிருக்கிறார்கள். அதில் ஆஜீத்துடைய சித்தி, ‘வந்து இத்தனை நாள் ஆச்சு, இப்ப வரைக்கும் பேசவே மாட்டிங்கறான். இங்க இருக்கறதுலயே சின்ன பையன் இவன்தான்.
READ MORE- ’இங்க எல்லாரும் ப்ளையிண்டா இருக்காங்க’- கோபத்தில் கேபி! #BiggbossPromo1
ஒவ்வொரு முறையும் நாமினேஷன்ல வரும் போது, ஏன் அந்த இடத்துல அவன் நிக்கறான் அப்படிங்கறத யாருமே அவனுக்கு எடுத்து சொல்லலையோ அப்படின்னு தோணுது’ என சொல்ல, ஆரி சிரித்து கொண்டே, ‘எங்க என் வாயதான் அடைச்சுட்டாங்களே, அவனுக்கு அட்வைஸ் பண்ணிதான எனக்கு அட்வைஸ் ஆரின்னு ப்ராண்ட் பண்ணினாங்க’ என சொல்ல, அவரது சித்தியும் ‘ஆமா, கரெக்ட்டுதான். ஆனா, கடைசி வரைக்கும் அவனுக்கு புரியவே இல்ல’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.