ஷிவானியை கீழே தள்ளிய ஆரி! #BiggbossPromo2

பிக்பாஸ் புரோமோவில் ஷிவானியை ஆரி கீழே தள்ளிவிட பாலாவுக்கும் ஆரிக்கும் இடையில் சண்டை வெடிக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் டாஸ்க் நடந்து கொண்டிருக்க ஆரி ஓடிவந்து ஷிவானியின் தலையை அழுத்தி பிடித்து உட்கார வைக்கிறார்.

இதன் பிறகு பாலா ஓடி வந்து, ஷிவானியை சுற்றி ஸ்டூல் வைக்கிறார். இதில் அப்செட் ஆன ஆரி, பாலா இருவரும் வாக்குவாதத்தை ஆரம்பிக்கிறார்கள். இதில் பாலா, ‘உங்கள மாதிரியே எனக்கும் ஸ்ட்டேட்டர்ஜி தெரியும். நீங்க தடுக்கி விழனும்னு ஸ்டூல் வைக்கல.

இப்படி விளையாட கூடாதுன்னுதான் வைக்கறேன்’ என சொல்ல அதற்கு ஆரி, ‘ஆம்பள பையன்தானே நீ, ஓடி வந்து பிடிடா. இந்த மாதிரி விளையாடறதுக்கு விளையாடாமயே இருக்கலாம்’ என டென்ஷனாகிறார்.

READ MORE- கேபியை மிரட்டிய பாலா! #BiggbossPromo1

இதில் பாலாஜி, ‘நான் சரியாதான் விளையாண்டுட்டு இருக்கேன்’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.

Exit mobile version