பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாவின் கோபம் குறித்து சோம் மற்றும் ரியோ பேசி கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் சமீபத்தில் ஃபேமிலி ப்ரீஸ் டாஸ்க்கில் குடும்பம் வந்த போது பழைய பாலாவை காணோம் என சொல்லி சொல்லியே மீண்டும் இப்படி கோபப்பட்டு கொண்டிருக்கிறார் என சோமும் ரியோவும் பேசி கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இவருக்கு தற்போது விளையாட்டும் பயத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளது எனவும், சண்டை போடுவதே அவன் சேவ் ஆகதான் எனவும், ஒரு கட்டத்திற்கு மேல்தான் பாலா சரியாக கேம் விளையாண்டு கொண்டிருப்பதாகவும் ரியோ மற்றும் சோம் பேசுவது போல புரோமோ இருக்கிறது.
READ MORE- ரேசில் முந்தும் ரியோ! #BiggbossPromo1
இதுவரை நடந்துள்ள 4 டாஸ்க்குகளிலும் ரம்யா முதலிடத்திலும் ரியோ மற்றும் ஷிவானி இரண்டாம் இடத்திலும் இருக்க பாலா, ஆரி மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள். சோம், கேபி அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள். நிலைமை இன்று எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.