பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் மீண்டும் பாலா ஆரி விவாதம் தனித்தனியாக ஹைலைட் ஆகியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் பாலா மற்றும் ஆரி கால் செண்டர் டாஸ்க்குக்கிற்கு பிறகு வெளியில் மற்ற ஹவுஸ் மேட்ஸ்ஸிடம் பேசி கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஆரி சனம் ஷெட்டியிடம், ‘அவனுக்கு நான் பதில் சொல்ல கூடாது. அவன் கருத்த முன் வைக்கனும். அது வெளிய நெகட்டிவ்வா தெரியனும். நான் பேசறத நீங்க தப்புன்னும் நினைக்கலாம். நான் நீங்க பேசறத தப்புன்னும் நினைக்கலாம். இதுதான் கணக்கு’ என சொல்லி கொண்டிருக்கிறார்.
அந்த பக்கம் பாலாஜி அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் பேசி கொண்டிருக்கிறார். நிஷா, அவர் பேசியதை கேட்டிருக்கலாம் என சொல்ல அதற்கு பாலா, ‘இதுதான் கணக்கு. எங்களுக்குள்ள என்ன நடக்குது அப்படிங்கறதை மக்கள் தெளிவா தெரிஞ்சக்கனும் அதான். இனிமே நான் யார்க்கிட்டயும் வாய்ஸ் அதிகமாக்கி சண்டை போட விரும்பல’ என சொல்கிறார்.