பிக்பாஸ்ஸின் முதல் புரோமோவில் கமல் இந்த வாரம் நடந்த டாஸ்க் மற்றும் எவிக்ஷன் குறித்தும் பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இதில் கமல்ஹாசன், உள்ளே எண்ட்ரி கொடுக்கும் போதே, ‘என்ன அப்படி செஞ்சிட்டாங்க, இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு? எதன் அடிப்படையில இவர்களுக்கு ஓட்டு போட்டு உள்ள உட்கார வச்சிருக்காங்க?’ இந்த மாதிரி பல கேள்விகள் இங்க இருக்க பலருக்கும் இருக்கு அப்படிங்கறதை உணர் முடியுது.
அதுக்கான பதில்தான் இந்த வாரம் கொடுத்துருக்காங்க’ என டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் குறித்தும் அதில் சோம், ஷிவானி, கேபியின் முயற்சிகளை பாராட்டும் விதமாக பேசியிருக்கிறார். மேலும், இதில் டிக்கெட் டூ ஃபினாலேவில் சோம் வெற்றி பெற்று முதல் ஃபைனலிஸ்ட்டாகவும், ஆரி காப்பாற்றப்பட்டு இரண்டாவது இறுதி போட்டியாளராகவும் தேர்வாகி உள்ளனர்.
READ MORE- பிக்பாஸ்ஸில் இந்த வார எவிக்ஷன் இவரா?
மேலும், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்குமா என்ற பேச்சு வந்த நிலையில், ஒருவர் வெளியேற்றப்படுவார் எனவும் கமல் சொல்வதோடு புரோமோ முடிகிறது.