பிக்பாஸ்ஸில் மீண்டும் அனிதா…ஆறுதல் சொன்ன ஹவுஸ்மேட்ஸ்! #BiggbossPromo1

பிக்பாஸ் வீட்டுக்குள் அனிதா மீண்டும் வந்திருக்கிறார்.

பிக்பாஸ்ஸின் இறுதிவாரம் தற்போது போய் கொண்டிருக்கிறது. இதில் கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ்ஸின் வெளியேறிய போட்டியாளர்கள் எல்லாரும் உள்ளே வந்து கொண்டிருக்க அனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் போவாரா இல்லையா என்பது தெரியாமல் இருந்தது.

சோஷியல் மீடியாவிலும் ‘போகற நிலைமையில இல்லை. பார்ப்போம்’ என அனிதா பதில் சொல்லியிருந்தார். இந்த நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் அனிதா அழுது கொண்டே உள்ளே நுழைய அனைத்து போட்டியாளர்களும் அவரை அரவணைத்து ஆறுதல் சொல்கின்றனர்.

READ MORE- செல்வராகவன் – தனுஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

‘அப்பாவா நாங்க இருந்து பாத்துக்கறோம். அப்பா உன்னை நினைத்து பெருமைப்படுவார்’ என அனைவரும் அனிதாவுக்கு ஆறுதல் சொல்வதோடு புரோமோ முடிகிறது.

Exit mobile version