இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி செய்தி வாசிப்பாளர்களை இழிவுபடுத்தியதாக கூறி அனிதா சம்பத்க்கும் சுரேஷுக்கும் விவாதம் ஏற்பட்டது.
வழக்கமாக பிக்பாஸ் சீசன்களில் கருத்து மோதல்களுக்கும் சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. மற்ற சீசன்களில் எல்லாம் இவை நடக்க சிறுது காலம் எடுக்கும், ஆனால் நான்காவது சீசனில் முதல் நாளிலேயே ஆரம்பித்து விட்டது. நேற்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கினால் ஏற்கனவே ஷிவானி போன்ற சிலர் சற்று மன வருத்தத்தில் தான் இருக்கிறார்கள், இதற்கும் மேலாக டாஸ்க் முடிந்த பிறகு அனிதா சம்பத் சுரேஷ் சக்ரவர்த்தியை கலாய்க்கும் விதமாக செய்தி வாசிப்பார்
அதற்கு சுரேஷ் நான் பொதுவாக செய்தி வாசிப்பாளர்களிடம் பேசுவதில்லை அவர்கள் வணக்கம் சொல்லும் போது அவர்களின் உமிழ்நீர் வெளியே தெறிக்கும் என்று சொன்னதாக கூறி இன்று அனிதா சம்பத் அந்த வார்த்தை தன்னை காயப்படுத்தியதாக கூறினார் அதை சுரேஷ் மறுத்துள்ளார். இதற்கு பதில் கூறும் விதமாக அனிதா சம்பத் குறும்படம் போட வேண்டும் என்று கூறியுள்ளார்.
குறும்படம் தேவைப்படுவது அனிதாவுக்கும் சக்ரவர்த்திக்கும் மட்டுமே, சுரேஷ் சக்ரவர்த்தி என்ன சொன்னார் என்பது பார்வையாளர்கள் நமக்கு தெரியும்.
உலக நாயகன் கண்ணசைத்தால் பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே குறும்படம் போடப்படும்!