பெண்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்படும் பாலாஜி, முதன் முறையாக சண்டையிட்ட சம்யுக்தா: இது வரை இல்லாத அளவிற்கு போர்களமாகிய பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சண்டைகள் கருத்து மோதல்கள் அதிகமாகவே உள்ளது. இதையெல்லாம் பிக்பாஸ் கொளுத்தி போடுகிறாரா? இல்லை இந்த முறை பங்கேற்கும் போட்டியாளர்கள் அப்படி சட்டென பற்றிக்கொள்ளும் கற்பூரமாக இருக்கிறார்களா? என தெரியவில்லை.

ஏற்கனவே பாலாஜி அதிகமாக கோபப்படுகிறார் கடினமான வார்த்தைகளை உபயோகிக்கிறார் என்று பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோவில் ரியோ, அர்ச்சனா, மற்றும் நிஷா, பெண்களை அவமதிக்கும் வார்த்தையை பாலாஜி சொல்லிவிட்டார் என அவரை கேள்வி எழுப்புகின்றனர்.

அவர்களின் குரல்களுக்கு பாலாஜி சற்றும் பிடிகொடுக்காமல் கூலாகவே பதில் அளிக்கிறார்.

ஏற்கனவே ரியோவின் தலைமையில் ஒரு குரூப் இருப்பதாக பிக்பாஸ் வீட்டிலும் சரி வெளியிலும் சரி பொதுவான கருத்து ஒன்று உலவி வருகிறது.

சில விஷயங்களை அர்ச்சனா கையாளும் விதம் சற்று விரும்பத்தகாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதுவும் சனம் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி சண்டையில் இவரது நாட்டாமைத்தனம் அனைவரும் முகம் சுளிக்கும் விதமாகவே இருந்தது.

இவர்கள் இணைந்து பாலாஜியை குற்றம் சுமத்த நினைக்கிறார்களா, இல்லை பாலாஜி பெண்களை அவமதிக்கும் விதமாக பேசினாரா என்று நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

சம்யுக்தா:

சம்யுக்தா பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அந்த அளவுக்கு எந்த பிரச்சனையிலும் பெரிதாக கலந்து கொண்டதில்லை.

ஆனால் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் தங்கச்சுரங்கம் டாஸ்கின் போது சம்யுக்தா கோபப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அவர் பாலாஜியிடம் கோபப்படுகிறாரா, இல்லை சனமிடம் கோபப்படுகிறாரா என்பது சற்று புரியாத அளவிற்கே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version