கதறி அழும் பிக்பாஸ் போட்டியாளர்கள், அனைவரையும் கண்கலங்க வைத்த டாஸ்க்!

மற்ற மூன்று சீசன்களை விட இந்த பிக்பாஸ் சீசன் சற்று சுவாரஸ்யம் குறைந்த ஒன்றாகவே உள்ளது.

இன்றைய நாளின் டாஸ்காக போட்டியாளர்கள் யாரை மிகவும் மிஸ் பண்ணுகிறார்கள் என அனைவரின் முன்னிலையிலும் பகிரும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தன்னுடைய எந்த உணர்ச்சிகளையும் அந்த அளவிற்கு வெளிக்காட்டி கொள்ள விரும்பாத நடிகை ரம்யா பாண்டியன் இந்த ப்ரோமோவில் தன் அம்மாவை மிஸ் செய்வதாக கூறி அழுகிறார்.

சம்யுக்தா பொதுவாக இது போன்ற தருணங்களில் தன் மகனை பற்றி மட்டுமே பேசுவார். ஆனால் அவர் இன்று தன் கணவரை பற்றி பகிர்ந்து கண் கலங்குகிறார்.

சுரேஷ் சக்கரவர்த்திக்கும் பாலாஜிக்கும் சமீப காலமாக பல கருத்து மோதல்கள் இருந்தாலும் இன்றைய ப்ரோமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி பாலாஜியை பார்க்கும் பொழுது தன் மகனை பார்ப்பது போல் இருக்கின்றது என கண் கலங்கி நெகிழ வைக்கிறார்.

இந்த பிக்பாஸ் சீசனில் பெரும்பாலும் அழுகையும் சண்டைக் காட்சிகள் மட்டுமே நடைபெறுவது போல சற்று சுவாரசியம் இன்றியே காணப்படுகிறது.

Exit mobile version