பிக்பாஸில் இந்த வாரம் eviction ஆக போவது சுரேஷ் சக்கரவர்தியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய ப்ரோமோவில் டாஸ்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் 1 லிருந்து 16 வரை தரவரிசைப்படுத்தப்படுகிறார்கள்.

முதலாம் இடத்தில நிற்பவர்கள் பிக்பாஸின் இறுதி வெற்றியாளர் எனவும் அடுத்தடுத்து நிற்பவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வரும் வாரங்களில் எலிமினேட் செய்யப்படுபவர்கள் எனவும் சொல்லப்படுகிறது.

இவர்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணை மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதில் பதினாறாக நிற்பவர்கள் இந்த வாரம் எலிமினேட் ஆக போகிறவர்கள் என சொல்லப்படுகிறது, சுரேஷ் சக்கரவர்த்தியும் அந்த பதினாறாம் எண்ணில் சென்று தான் இந்த வாரம் ஏவிக்ட் ஆக போவது போல் சொல்கிறார்.

ஏற்கனவே நாடா காடா டாஸ்கில் நடந்த பிரச்சனைகளால் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸிடம் சென்று தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வாரம் யார் ஏவிக்ட் ஆகா போகிறார்கள் என நாளை தெரிந்துவிடும்.

நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டின் முக்கிய போட்டியாளர் ஆகி விட்டார். இந்நிலையில் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் பிக்பாஸ் வீடு அந்த அளவுக்கு மக்களால் ரசிக்கப்படுமா என்பது சந்தேகமே!

Exit mobile version