பிக்பாஸ்ஸில் இந்த வாரம் வெளியேறுவது ஆஜீத்தா?

பிக்பாஸ்ஸில் இந்த வாரம் வெளியேறுவது ஆஜீத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது ஆஜீத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் ஆரம்பித்த மூன்றாவது வாரமே இரண்டாவது எவிக்‌ஷனாக ஆஜீத் வெளியேற இருந்தது.

ஆனால், நாமினேஷன் ஃப்ரீ பாஸ் இருந்ததால் தப்பித்தார். ஆனால் அதற்கு பிறகு வேல்முருகன், சுரேஷ், சம்யுக்தா, சனம், அர்ச்சனா, அனிதா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெவ்வேறு காரணங்களுக்கு வெளியேறினார்கள்.

ஆனால், ஆஜீத், சோம், ஷிவானி இவர்கள் கேமை விளையாடாமல் இருந்தது எவிக்ட் ஆகாமலும் இருந்தது வெளியே பார்வையாளர்கள் இடையே ’விளையாட்டின் ஆர்வத்தை குறைக்கிறது’ என்ற பேச்சு இருந்தது.

READ MORE- பிக்பாஸ்ஸில் பாலாவுக்கு ரெட்கார்ட்?

அந்த வகையில் இந்த வாரம் ரம்யா வெளியேறுவதாக இருந்த நிலையில், தற்போது கடைசி இடத்தில் ஆஜீத் மற்றும் ஷிவானி இருக்கிறார்கள். குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஆஜீத் இந்த வாரம் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version