படப்பிடிப்பை நிறைவு செய்த சிவராஜ்குமார்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில். தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவராஜ்குமார் நிறைவு செய்ததாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version