நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் வழக்குப்பதிவு

நடிகை வனிதா விஜயகுமார் மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வனிதாவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version