கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாண்டிச்சேரியில் உள்ள சாக்லெட் கடையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சாக்லெட் சிலை உருவாக்கியுள்ளனர்.
பாண்டிச்சேரி :
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பாண்டிச்சேரி மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் கடையில் வாழ்வில் சிறந்த சாதனையாளர்களுக்கு சாக்லெட் சிலை செய்து கவுரவிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு அந்த சாக்லெட் கடையில் மறைந்த பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சாக்லெட் சிலை உருவாக்கி பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விங் கமாண்டர் அபினந்தன் சிலையை உருவாக்கி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more – டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேரணி : ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலைக்காக சுமார் 6 அடி உயரத்தில் 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 161 மணிநேரம் செலவழித்து இந்த சிலையை உருவாக்கி உள்ளனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையானது தற்போது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையினை பொதுமக்கள் ஆர்வமுடனும்,அதன் அருகே நின்று செல்பி எடுத்து கொண்டும் செல்கின்றனர்.