பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசையில் புதிய பேய் படம் ஒன்று தயாராகிறது. இந்தப் படத்துக்கு `பி-2′ என பெயரிடப்பட்டுள்ளனர். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள நடிகர் மனோஜ், `பி-2′ படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். `யாத்திசை’ படத்தில் நடித்த நடிகை சித்து குமரேசன் நாயகியாக நடிக்கிறார். இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, அஸ்மிதா ஆகிய நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் சிவம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறுகையில், “பேய், திரில்லர் கதையம்சத்தில் இந்தப் திரைப்படம் உருவாகிறது. நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறோம். தேவா இசையமைத்துள்ளது படத்துக்கு பெரிய பலம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவா இசையில் புதிய பேய்ப்படம்
-
By mukesh

Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
daniel
August 31, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
daniel
August 31, 2026
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026