இயக்குநர் தேசிங்கு ராஜாவுக்கும் நிரஞ்சனிக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் தற்போது திருமணம் எப்போது என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.
’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு ராஜா.
இவருக்கும் இந்த படத்தில் நடித்திருந்த இயக்குநர் அகத்தியன் மகள் நிரஞ்சனிக்கும் நிச்சயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த விஷயத்தை இவரது சகோதரியும் நடிகையுமான விஜியலக்ஷ்மி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
READ MORE- தளபதி விஜய் வழியில் சிவகார்த்திகேயன்? #Don #SK19
இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தினர். விஜியலக்ஷ்மியின் கணவர் ஃபெரோஸ், விஜியின் அக்கா கனியின் கணவர் திரு இவர்கள் இருவருமே இயக்குநர்கள்தான்.
இப்போது நிரஞ்சனியும் இயக்குநர் தேசிங்கை கரம் பிடிக்க, எனது அப்பா அகத்தியனுக்கு எல்லா மாப்பிளைகளும் இயக்குநர்கள்தான் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து தற்போது இவர்களது திருமணம் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 25 அன்று பாண்டிச்சேரியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.