பிரசாந்த் படத்திலிருந்து மோகன் ராஜா திடீர் விலகல்…

நடிகர் பிரசாந்த் நடிக்கும் படத்திலிருந்து இயக்குநர் மோகன் ராஜா திடீரென விலகியுள்ளார்.
mohan raja

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்று பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றிக்கான தேசிய விருதுகளை இந்தப் படம் குவித்தது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநரும், நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் இருந்து மோகன் ராஜா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோகன் ராஜாவுக்கு பதிலாக ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கவுள்ளார்.

Exit mobile version