‘ஈஸ்வரன்’ படத்தின் மியூசிக்கல் ஆல்பம் எப்போது ரிலீஸ்?

சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் மியூசிக்கல் ஆல்பம் ஜனவரி 2 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்பு கரியரில் கம்பேக் கொடுக்கும் படமாக இயக்குநர் சுசீந்திரனின் ‘ஈஸ்வரன்’ அமைந்திருக்கிறது. தமன் இசையமைத்திருக்கிறார்.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு எடுக்கப்பட்ட இந்த படம் கிராமத்து கதையை மையமாக கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் பொங்கல் வெளியீடு என்பதை ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான போதே அறிவித்து விட்டார்கள்.

READ MORE- மிருணாளினி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

படம் வெளியாக இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ‘தமிழன் பாட்டு’ என தொடங்கும் இந்த பாடல் கிராமத்து திருவிழாவுக்கான கொண்டாட்டத்தோடு அமைந்திருந்தது.

தற்போது படத்தின் மியூசிக்கல் ஆல்பம் வரும் ஜனவரி2 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Exit mobile version