அரவிந்த் சாமியின் 50 சதவீத இருக்கை கருத்து : எனிமி பட தயாரிப்பாளர் கொடுத்த காட்டமான விமர்சனம்

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளே போதுமானது என்ற அரவிந்த் சாமியின் கருத்திற்கு எனிமி பட தயாரிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர்,சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகின்றன. எனவே திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களுடன் படம் பார்க்க அனுமதிக்க எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை முன்வைத்தார். சிம்புவும் அறிக்கை மூலம் இக்கோரிக்கையை முன்வைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு சம்மதம் தெரிவித்து அனுமதி வழங்கிவிட்டார். இந்த 100 சதவீத இருக்கை அனுமதி வழங்கியதை தொடர்ந்து பலரும் சமூக ஊடகம் மற்றும் பொது ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும், தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெகமே தந்திரம், கார்த்தியின் சுல்தான் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் OTT யில் இருந்து தப்பித்து திரையரங்களில் 100 சதவீத ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றனர். இந்தநிலையில், நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், திரையரங்குகளில் 100% இருக்கைகளை நிரப்புவது தவறானது. இப்போதைய சூழலில் திரையரங்கில் 50% நிரப்புவதே சரியாக இருக்கும் என்றார்.

read more – கர்நாடகாவில் ஒரேநாளில் 25 பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று : மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?

அரவிந்த்சாமியின் இந்த கருத்துக்கு திரைத்துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் தயாரிப்பாளர் காட்டமான விமர்சனம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ரயில்கள், விமானங்கள், மால்கள், டாஸ்மாக், அரசியல் கூட்டங்கள், விடுதிகள் போன்றவை முழுமையாக இயங்கும்போது ஏன் சினிமா மட்டும் இயங்கக் கூடாது? எம்டிசி பேருந்துகள் 100% உடன் இயங்கத் தொடங்கியபோது இதை ஏன் கூறவில்லை? மக்கள் விரும்பினால் திரையரங்குகளுக்கு செல்லட்டும். மக்கள் யாரையும் இங்கு யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version