அப்பாவின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விளையாடும் இந்த சுட்டிக்குழந்தை யார் தெரியுமா?

sunnaina

sunnaina

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின் தம்பி நகுலுடன் காதலில் விழுந்தேன் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அந்த படத்தில் இருவரும் கெமிஸ்ட்ரியும் வேற லெவலுக்கு ஒர்க் அவுட் ஆனதை அடுத்து, மாசிலாமணி படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர். அந்த படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. 

அதன் பின்னர் தமிழில் சுனைனாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெறி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்தரகனிக்கு ஜோடியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். 

தற்போது மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நகுலுடன் இணைந்து “எரியும் கண்ணாடி” படத்தில் நடித்துள்ளார். அந்த படம் தனக்கு மீண்டும் திரையுலகில் நல்ல கம்பேக்காக அமையும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். தற்போது சுனைனா சின்ன வயதில் தன்னுடைய தந்தையின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விளையாடும் இந்த போட்டோ சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.

Exit mobile version