பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள தகவல் ரசிகர்களுக்கிடையே ஆறுதலாக அமைந்துள்ளது.

தமிழ் ரசிகர்களின் மனதினை விட்டு எப்போதும் நீங்காத பாடல்களுக்கு சொந்தக்காரரான பாடகர் எஸ்.பி.பிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரிரு நாட்களுக்கு முன்பாக உடல் நலம் மிகுந்த மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என திரையுலகத்தினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டார்கள்.
இந்த சூழலில் தான் அவ்வப்போது எஸ்.பி.பியின் உடல் நலம் குறித்து தகவல்களை தெரிவிக்கும் அவரது மகன் எஸ்பி சரண் மகிழ்ச்சியான செய்தியினை தற்போது கூறியுள்ளார். அதில் எஸ்.பி.பி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இச்செய்தி திரையுலத்தினர் மட்டுமில்லாது உலகம் முழுவதுமுள்ள எஸ்.பி.பி ரசிகர்களுக்கிடையே உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.