நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!!!

ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் 2டி. ’36 வயதினிலே’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்டவை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது தங்களுடைய 14-வது தயாரிப்பை அறிவித்து இருக்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இடுப்பு புகழ் ரம்யா பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோன்று வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இவர்களுடன் இணைந்து ‘கோடங்கி’ வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. ஒளிப்பதிவாளராக  சுகுமார் இந்தப் படத்துக்கு பணிபுரியவுள்ளார். க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.

Exit mobile version