‘மன வலியை உணர்கிறேன்’… முதன் முறையாக மெளனம் கலைத்த சாய் பல்லவி.. திரையுலகமே திகைப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக நடிகை சாய்பல்லவி தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

மருத்து படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு எதிராக நடிகர் சூர்யா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா “எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்குப் பிறகு குறைந்துவிடும். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அவசியம்; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. தேர்வு என்பதைத் தாண்டி வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் உள்ளன; ஒரு தேர்வு உங்கள் உயிரை விட பெரிதல்ல.

நானும் பல்வேறு தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளேன். மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். பயம், கவலை, வேதனை, விரக்தி இவை அனைத்தும் சிறிது நேரத்தில் மறையும் விஷயங்கள். தற்கொலை செய்துகொள்வது உங்களைப் பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மாணவர்களை புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கின்றோம். நம்பிக்கையுடன் தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் ஜெயித்து விடலாம். அச்சமில்லை… அச்சமில்லை… அச்சம் என்பது இல்லையே.. ” என தெரிவித்திருந்தார்.

தற்போது மருத்துவரும், பிரபல நடிகையுமான சாய் பல்லவி நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் மன வலியை உணர்கிறேன். 18 வயது கூட ஆகாத மாணவர்கள், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது என்றும், நான் எப்போதும் மாணவர்களின் பக்கமே என்றும் கருத்து கூறியுள்ளார்.

Exit mobile version