வித்யுலேகாவின் மாற்றத்தைக் கண்டு – நெட்டிசன்கள் ஆச்சரியம் !

Vidyullekha Raman @ 11th CIFF 2013 Red Carpet Day 3 Images

மூத்த நடிகர் மோகன் ராமனின் மகளான வித்யுலலேகா ராமன், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி 2012 ஆம் ஆண்டு வெளியான நீதானே என் பொன்வாசந்தம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார், இந்த படத்தில் சமந்தாவின் நண்பராக இவர் நடித்துள்ளார்.

வித்யுலலேகா ராமன்- நீதானே என் பொன்வசந்தம்

இதைத் தொடர்ந்து அவர் வீரம், காக்கி சட்டைய், ஜில்லா, மாஸ் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அவரது கொழுகொழுத்த தோற்றம் மற்றும் நகைச்சுவை உணர்வு ரசிகர்களை ஈர்த்தது, 2018 முதல், அவர் தமிழில் நடிக்கவில்லை.

தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார், கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வித்யுல்லேகா நிறைய எடை குறைத்து ஒரு பெரிய உடல் மாற்றத்திற்கு ஆளானார்

அவர் தனது எடையை 86.5 கிலோவிலிருந்து 65.3 கிலோவாகக் குறைத்துள்ளார். அதோடு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது, வித்யூலேகா தான் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் இருக்கும் ஒரு படத்தைப்  பகிர்ந்துள்ளார். போலீஸ் கெட்டப்பில் கன கச்சிதமாக பொருந்தியுள்ள வித்யூலேகாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version